![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
நடனம் |
||
தேசபக்தி ததும்பிய
ஸ்வர்ணமாலியாவின் நடனம் சென்னை... ஜுலை...28 பாரத திருநாட்டின் மீது தனக்குள்ள பக்தியை பற்பல விதங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றனர். நாட்டியத்தின் மூலம் இவ்வாறு தன்னுடைய அளவிலா பக்தியை, பாரதத்தின் மீது தான் கொண்டுள்ள காதலை நடன கலைஞர் ஸ்வர்ணமாலியா கணேஷ் வெளிப்படுத்திய நிகழ்ச்சி 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சென்னை நாரத கான சபாவில் இம்மாதம் 18-ந் தேதி எம்.சி.சி. பைனான்ஸ் லிமிடெட் சார்பில் "வந்தே மாதரம்" என்ற நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்தது. சுப்பிரமணிய பாரதியின் தேசபக்தி பாடல்களின் பின்னணியில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காண்போர் வியக்கும் வண்ணம் ஸ்வர்ணமாலியா கணேஷ் நடனமாடினார். வெள்ளை நிற பட்டாடையில் நடனமாடிய ஸ்வர்ணமாலியாவின் ஒவ்வொரு அசைவும் மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கு மெருகேற்றியது. முதலில் திருப்பள்ளி எழுச்சியும், பின்னர் பாருக்குள்ளே நல்ல நாடும், அதன் பிறகு மகாத்மா காந்தியைப் பற்றிய பாடலும், இறுதியாக பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவும் இடம் பெற்றன. தனது நடனத்தில் தீவிர ஈடுபாட்டுடன், தன்னையே அதற்கு அர்பணித்து, ஒவ்வொரு அசைவையும் ரசித்து ஆடிய ஸ்வர்ணமாலியா கணேஷ் காண்போரையும் பரவசத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலுக்கு ஆடும் பொழுது, தேசபக்த உணர்ச்சியை ஜடப்பொருளுக்குள்ளும் உருவாக்கும் வண்ணம் அவரது நடனம் அமைந்திருந்தது. இத்தகையதொரு நிகழ்ச்சியை அமைக்க கருத்துருவை தந்தவர் டி.எஸ்.பார்த்தசாரதி. இந்த நடன நிகழ்ச்சியின் ஆடற்கலைஞர் கௌசல்யா ஷ்ரீநிவாசன். நட்டுவாங்கமும் அவரது ஏற்பாட்டிலேயே அமைந்திருந்தது. ஸ்வர்ணமாலியாவுக்கு மற்றொரு அதிர்ஷ்டம், வாய்ப்பாட்டு நல்கிய குத்தாலம் நாகராஜனின் குரலும், வயலின் வாசித்த சிவகணேஷின் திறனும், மிருதங்கம் வாசித்த மாயூரம் சங்கரின் தனிச்சிறப்பும், புல்லாங்குழல் வாசித்த தியாகராஜனின் செவிக்கினிய இசையும் என்று கூறினால் அது மிகையாகாது.
|
| |