![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
நடனம் |
|
கண்ணுக்கும், செவிக்கும் 3 நாள் விருந்துஆந்திர மாநில வாரங்கல்லில் ஹனுமகோண்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற 1000 தூண் ஆலயத்தில் அண்மையில் நிறைவடைந்த 3 நாள் காகத்திய உற்சவம் 97 கண்ணுக்கும், செவிக்கும் பெரு விருந்தாக அமைந்திருந்தது. பாலமுரளி கிருஷ்ணாவின் கிருஷ்ண பாரிஜாதம் என்ற நாட்டிய நாடகம், நாட்டின் 50 -ம் ஆண்டின் சுதந்திரத்தின் நினைவாக விசேஷமாச தயாரிக்கப்பட்ட பாரதீயம் என்ற நிகழ்ச்சி, மற்றும் காகத்திய வைபவம் என்ற ஒளி ஒலி நாடகம் ஆகியவற்றை கூறலாம். விழாவின் துவக்க பாடலாக பாலமுரளி கிருஷ்ணா தேர்வு செய்திருந்த எந்தரோ மஹானு பாவலு என்ற பஞ்ச ரத்தின கீர்த்தனையையும் பக்தி சிரத்தையுடன் அவர் பாடிய பாங்கும் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது. அதையடுத்து அவரின் சொந்த கிருதியான "வந்தே மாதரம் அந்திமாதரம்" ரசிகர்களை எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்தது. இதை தொடர்ந்து அவர் பாடிய பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. பாலமுரளி கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக்கு இசைவாக நீமணி சோமயாஜீலுவின் கடம், பி.எஸ்.ஆர் மூர்த்தியின் மிருதங்கம், புஷ்ரால மனோரமாவின் வயலின் ஆகியவை நன்கு ஒத்துழைத்தன. இன்டாக் ஆதரவில் மேடை ஏறிய காக்கத்திய வைபவம் அப்போதைய தலைநகர் ஹனுமகோண்டாவுக்கு அருகே மாட்டு வண்டி ஒன்றின் சக்கரம் தடைபட்டு நிற்பதுடன் துவங்குகிறது. சக்கரத்தை சுழற்ற எடுத்துக் கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வியர்த்தமாகின்றன. அப்போது அங்கே வரும் மன்னர் புரோலராஜீ வண்டிச்சக்கரத்தின் இரும்பு வளையம் தங்கமாக மாறியிருப்பதை கண்டு வியக்கிறார். அந்த இடத்தை தோண்டி பார்த்ததில் அங்கு ஒரு ஸ்வர்ணலிங்கம் இருக்கிறது. இதன் மீது எந்த பொருள் பட்டாலும் அது தங்கமாக மாறிவிடுகிறது. அந்த லிங்கத்தை நகர்த்த நடந்த முயற்சிகளும் வீணாயின. இதற்கிடையே அந்த வழியாக வந்த ஷ்ரீரமணீய யோகேந்திரா அரசரிடம் தாம் ஒரு கண்டதாகவும் அதில் சிவபெருமான் அங்கு ஒரு லிங்கமாக உருவாகியுள்ளதாக தம்மிடம் தெரிவித்தார் என்றும் கூறினார். அந்த இடத்தில் ஒரு ஆலயம் கட்டினால் அடுத்த 300 ஆண்டுகளுக்கு நாடு வளமுடன் விளங்கும் என ஷ்ரீயோகேந்திரா மன்னருக்கு யோசனை கூறினார். இந்த இடமே புதிய தலைநகரமானது. மன்னர் கட்டிய சுயம்பு ஆலயமும் அங்கு நிலைத்து நின்றது. இந்த கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. மன்னருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மிகச்சிறந்த அரசனாக விளங்குவான் என்று கூறிய ஜோதிடர்கள் அவன் தந்தையை கொல்வான் என்றும் தெரிவித்தார்கள். ஆகவே குழந்தையை கொன்று விடுமாறு அரசருக்கு அமைச்சர்கள் ஆலோசனை கூறினார்கள். அதனை ஏற்க மறுத்த அரசன் சுயம்பு ஆலயத்தின் பூசாரி ருத்ரைய்யாவிடம் தமது மகனை ஒப்படைத்தார். இளவரசனுக்கு ருத்ரதேவா என்று பெயரிட்டு பூசாரி வளர்த்து வந்தார். நாள்தோறும் இந்த ஆலயம் சென்று வழிபட்டு வரும் மன்னர் ஒருநாள் இளைஞனான தனது மகனைப்பார்த்து அடையாளம் கண்டு கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவனை பாசத்துடன் கட்டித் தழுவினான். திடுக்கிட்டு எழுந்த இளவரசன் தந்தையை தனது எதிரியென தவறாக நினைத்து வெட்டி விடுகிறான். சாகும் தருவாயில் தமதுஅமைச்சர்களை அழைத்து இளவரசன் ருத்ரதேவாவிற்கு முடி சூட்டுமாறு அவர்களிடம் அரசன் கேட்டுக்கொண்டார். தந்தையைக் கொன்ற பாவம் தீர பல ஆலயங்களை கட்டினான் ருத்ரதேவா. ஆயிரம் வாசல் ஆலயம் என பின்னர் அழைக்கப்பட்ட ருத்ரேஸ்வர ஆலயமும் இவற்றில் ஒன்று. இங்கு நடைபெற்ற ஒளி ஒலி காட்சியில் காகத்திய அரச வம்சத்தினர் மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டப்பணிகளும் விவரிக்கப்படுகின்றன. நாட்டிய நாடகத்தில் குச்சிபுடி பாணியில் வேம்பட்டி நாகேஸ்வரி இயக்கத்தில் நடைபெற்ற ஸ்வாகத நிருத்தியம் வெகுவாக பாராட்டப்பட்டது. ஹைதராபாத்தை சேர்ந்த குச்சிபுடி அகாடமி வழங்கிய ஷ்ரீகிருஷ்ண பாரிஜாதமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பெண்களிடம் உள்ள பொறாமைக்குணத்தை பாமா, ருக்மணி மூலம் வெளிப்படுத்த உதவிய நாரத முனிவர் ஆண்டவனின் அருளைப்பெற பக்தி மார்க்கமே சிறந்தது என தெளிவு படுத்துகிறார். இந்த நாட்டிய நாடகத்தில் கிருஷ்ணனாக நடித்த ஷ்ரீமதி ப்ரியா கார்த்திகேயன், ருக்மணியாக நடித்த பி.சைலஜா, சத்யபாமாவாக நடித்த ேஷாபா நாயுடு அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே மாறி ரசிகர்களை பரவசப்படுத்தினார்கள். |
|