![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
இசை |
|
கிருஷ்ணபிரியாவின் அதிரவைக்கும் கச்சேரி சென்னை... ஜனவரி...9சமீபத்தில் சென்னை நாரதகான சபாவில் இசைவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இருந்தும் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணபிரியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவரின் பாடல்கள் கணீரென்றும், நெளிந்தோடும் நயத்துடனும் அமைந்திருந்தது. பேகடா வர்ணத்துடன் கச்சேரியை துவக்கி, ஷ்ரீமஹாகணபதிம் என்ற முத்துசாமி தீக்ஷதரின் அடாணா ராகத்தில் அமைந்த பாடலையும் அற்புதமாகப் பாடினார். அடுத்து, நர்த்தனஜன பாலினி என்ற நளினிகாந்தி ராகப்பாலையும், மோஹன ராக ஆலாபனையும், கீர்த்தனையும் கற்பனை ஸ்வரங்களுடன் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்தது. வெங்கடாசல நிலையம் மற்றும் தில்லானாவுடன் கச்சேரி முடிவடைந்தது. பவ்யலட்சுமியின் வயலினும், பாஸ்கரனின் மிருதங்கமும் இவருக்கு பக்க பலமாக இருந்தது. Topவெங்கட்ராமன் இன்னிசை சென்னை... டிசம்பர்...13 தொடர் இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் சென்னை மயிலை நாதோபாசன இசைக்கேச்சரி சமீபத்தில் மயிலை சீனிவாச சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. இதில் ஜே.வெங்கட்ராமனின் இசைக்கச்சேரியும் இடம்பெற்றது. முன்னாள் வயலின் வித்வான் திருச்சி ஜெயராமய்யரின் குமாரர் வெங்கட்ராமன் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பாரம்பரிய முறை வழுவாது பாடினார். ரகுநாயகா(ஹம்சத்வனி), நௌரும்சினாறு(மாளவி), எடுலப்ரோ துவோ(சக்ரவாகம்) ஆகிய கீர்த்தனைகளைக் கொண்டு பாடப்பட்டது. மாளவி ராகத்தில் சிட்டை ஸ்வரத்துடன் கற்பனை ஸ்வரங்களும் அ மைக்கப்பட்டது. சக்ரவாக ஆலாபனை விரிவாகவும், நிரவல் ஸ்வ ரங்களை தாள விரிவுடன் பாடினார். விஜயநாகரி ராகத்தில் விஜ யாம்பிகே, ஹம்சாநந்தி தில்லானா ஆகியவை சிறப்புடன் இருந்தது. அனந்த ராமனின் இனிமையான வயலின் இசையும், நெய்வேலி நாராயணன் தாளக் கற்பனையும் மற்றும் கோவிந்தராஜனின் கடமும் சிறப்பாக அமைந்தது. |
|