TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

சங்கர நாராயண அய்யரின்
நினைவுநாள் விழா

சென்னை... டிசம்பர்...7

மரகதம் சங்கர நாராயணன் டிரஸ்டும், பிரம்ம ஞான சபாவும், டிராவல் மாஸ்டர்ஸ் இண்டியா (பி) லிமிடெட் நிறுவனமும் இணைந் து டாக்டர் இ.எஸ்.சங்கர நாராயண அய்யரின் நினைவு நாளை கொண்டாடின. இவ்விழா சென்னை மியூசிக் அகாடமியில் தொழிலதிபர் டி.டி.வாசு தலைமையில் நடைபெற்றது.சமீபத்தில் நடைபெற்ற இவ்விழாவை பாடகி டி.கே.பட்டம்மாள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் பிரபல பாடகரான கே.வி.நாராயண சாமியும் கலந்து கொண்டார். மியூசிக் அகாடமி செயலர் ராம்ஜி வரவேற்புரையாற்றினார்.

முதலில் இறை வணக்கத்தை அனுராதா சுரேஷ் கிருஷ்ணகுமார் பாடினார். பின்னர் பாடகி சுலோசனா பட்டாபிராமன் மாணவிகள் இசைத்த, டாக்டர் சங்கர நாராயண அய்யரின் சில கீர்த்தனைகளை மூலாதார (மாயாமாளவ கவுளை), பிரத்யட்ச தேவம் (சங்கராபரணம்), நவநீத சோத (நாதஸ்வராவளி), துர்கா லட்சமிசரஸ்வதி (நளினகாந்தி), தேவதேவ (சாரங்கா), ஆகியவை இடம்பெற்றன.

நித்யஷ்ரீ மகாதேவனின், மூலாதார(மாயாமாளவ கவுளை), செந்தில் அதிபனே(தர்பார்), ஜகன்மோகன மகாதேவதேவ (பேகட), கைவிடலாகுமோ வேலா(தேவகாந்தாரி), பரிபாலயமாம் (மிமேந்திர மத்யமம்) ஆகிய கீர்த்தனைகளை அட ங்கிய பாட்டும் இடம் பெற்றது. இவருக்கு பாகாலா ராம்தாஸ் (வயலின்), சிவகுமார் (மிருதங்கம்), உமா சங்கர் (கடம்) சிறப்பாக வாசித்து, பாடல் மட்டுமன்றி விழாவையும் சிறப்புற வைத்தனர்.

இவ்விழாவின் முடிவில் கே.என்.சங்கர நாராயணன் நன்றி கூறினார் .

Top


சங்கீதாவின் நளின இசை

சென்னை... நவம்பர்...28

சமீபத்தில் சென்னை மயிலை சீனிவாசா சாஸ்திரி ஹாலில் நாதோபாசனா ஆதரவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கீதா கிருஷ்ணமூர்த்தியின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

இவர் வித்வான் கரூர் கிருஷ்ணமூர்த்தியின் புதல்வியாவார். இவர் தற்போது சுதாரகுநாதனிடம் இசை பயின்று வருகிறார். சிறந்த குரல் வளமும், ஞானமும் உடைய சங்கீதா லால்குடியாரின் நளினக ரந்தி வர்ணத்துடன் கச்சேரியை தொடங்கினார்.

புரந்தரதாசரின் சந்திரசூட என்ற பதத்தை ராகமாலிகையில்ல வழங்கி நாட்டைக்குறிஞ்சியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். தோடியில் "கருணஜுடவம்மா"(தியாகராஜர்) கிருதியையும், "ராகா சசிவதனா" என்ற டக்கா ராக கீர்த்தனை யையும் சிறப்பாக பாடி, மிஸ்ர சிவரஞ்சனியில் தில்லானாவை வழங்கி விழாவில் சிறப்பித்தார்.

Back    Next    Top