TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

ஷ்ரீமுத்துசுவாமி தீட்சதரின் நினைவு அஞ்சலி

சென்னை... நவம்பர்...15

சங்கீத சபாக்கள் தோன்றுவதற்கு முன்பு பல ஜமீந்தார்கள் இ சை, நடன வல்லுநர்களை ஆதரித்து, அவர்களிடம் உள்ள கலை மேலும் வளர அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை அள்ளித் தந்தனர்.

அதுபோல தனிமனிதனாகிய டாக்டர் ஷ்ரீவத்சா இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விழாக்களை நடத்தி வருகிறார். சங்கீத திருமூர்த்திகளில் ஒருவரான ஷ்ரீமுத்துசுவாமி தீட்சதரின் நினைவு அஞ்சலி தீபாவளியன்று இசை கலைஞர்கள் கொண்டாடும் வழக்கத்தை ஷ்ரீவத்சா "குருகுகாஞ்சலி" என்ற அமைப்பில் 6 வருடங்களாக விழா நடத்துகிறார். இவ்விழா சாஸ்தி ரி ஹாலில் 9 நாள் நடைபெற்றது. இவ்விழாவில் கிட்டதட்ட 200 கீர்த்தனங்கள் பாடப்பட்டது.

நவம்பர் முதல் தேதியன்று இளம் பாடகர் பாலாஜி சங்கரின் நிகழ்ச்சி நடந்தது. எடுப்பான சரீரத்தைக் கொண்டு, தர்மவதியையும், காம்போதியையும் மிக நன்றாக கையாண்டார். ராகவின்யாசத்தில் ராகத்தின் விஸ்வரூபத்தை தார ஸ்தாயியில் பாடியது அருமை. ஸ்வர பிரஸ்தாரம்விறுவிறுப்பாக தேவையான அளவு இருந்தது. வயலின் எம்.ஏ.சுந்தரேஸ்வரனின் காம்போதி, நெய்வேலி நாராயணன் மிருதங்கம், புருேஷாத்தமன் கஞ்சிரா பக்கபலமாக இருந்தது.

இளம் கலைஞர் ஜெயந்திகிரணின் வீணை நிகழ்ச்சி நல்ல கற்பனையுடனும், பைரவி ராகத்தை கொண்டும் மிக அற்புதமாக வாசித்தார். "பால கோபால" கிருதி கச்சிதமாக இருந்தது.

இளம் கலைஞர்களில் முன்னணியில் நிற்கும் விஜயசிவா பாடல் விறு விறுப்பாகவும், பைரவி ராகமும் லலிதாம்பிகையும் தரமாக இருந்தது.

இசைக்கலைஞர்களில் முன்னணியில் இருப்பவர் சஞ்சய் சுப்பிரமணியம், கல்யாணி ராக ஆலாபனை மற்றும் "ஞான பிரசுனாம்பிகே" கிருதியும் ஸ்வர பிரஸ்தாரமும் அழகுடனும், வா ர்த்தைகள் தெளிவாகவும் புரியும் படி பாடப்பட்டது.

அனுபவமிக்க நீலா ராம்கோபாலின் நிகழ்ச்சி அதிக அறிவு பூர்வமாக இருந்தது. காம்போதி ராகம் நன்றாக இருந்தது. சிவ பந்துவராளி ராகத்தில் "ஷ்ரீசத்ய நாராயணா" கிருதியும் இன்பம் தர வைத்தன.

துடிப்புள்ள இளம் கலைஞர் நித்யஷ்ரீ மகாதேவனின் நிகழ்ச்சிக்கு அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்தனர். தன் இசையினால் அவர் எல்லோரையும் கவர்ந்தார். சாவேரி ராக ஆலாபனையும் "ஷ்ரீராஜ கோபாலா" கிருதியும் மிக உயர்தரமாக பாடப்பட்டது.

Back    Next    Top