TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

புல்லாங்குழல் இசை

சென்னை... நவம்பர்...7

தியாராஜ வித்வத் சமாஜ் ஆதரவில் கே.வி.ராமானுஜம் ஓர் உயர்தர புல்லாங்குழல் நிகழ்ச்சியை அளித்தார்.

முதலில் இசைத்த வலசி (நவராகமாலகா) வர்ணத்திலேயே நிகழ்ச்சி களைகட்டியது. தொடர்ந்து ஷ்ரீ கணபதியை (சவுராட்டிரம்) மிக இனிமையாக வாசித்தார். புல்லாங்குழல் மே தை மாலியை நினைவூட்டும் வகையில் ரஞ்சனி ராக வின்யாசம் வாசித்தார். துர்காச்சரா கிருதி மிக நன்றாக இருந்தது. லதாங்கி ராகத்தில் ஞான பாவமும், வாசிக்கும் வழியும் அனுபவமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மரிவேரே கீர்த்தனத்தில் நிரவலும், ஸ்வரமும் அழகு பொருந்தியும், சகானா கிருதி வந்தனமு மெருகுடன் மனதை தொடும்படி வாசித்தார்.

வயலின் வாசித்த எம்.ஆர்.கோபிநாத்தின் லதாங்கியும், தஞ்சாவூர் ஆர்.குமாரின் மிருதங்கமும் மிக அருமையாக இருந்தது.

Top


சென்னையில் ரஷ்ய பெண்மணியின் அரங்கேற்றம்

சென்னை... அக்டோபர்...4

இசையும், கலைகளும் எல்லைகளை கடந்து மனித மனங்களை ஒன்றிணைப்பவை என்று கூறுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தான் சென்னையில் நடைபெற்ற ரஷ்ய பெண் ஒருவரின் நடன அரங்கேற்றம்.

சென்னையில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் நிகோலாய புட்யர்ஸ்கியாவின் மகள் நடாலியா. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பரதநாட்டியத்தை சிரத்தையுடன் கற்று வந்தார். ரதம் போன்ற உடல் வாகிணைக்கொண்ட நடாலியாவின் நடன அரங்கேற்றம் சென்னை மியூசிக் அகாடமியில் சமீபத்தில் நடைபெற்றது. தஞ்சை நால்வரின் பைரவி வர்ணத்தில் குரு மீனாட்சி சித்தரஞ்சன் அமைத்திருந்த ஜதி அடவுகளை விறுவிறுப்பாக ஆடி ரசிகர்களின் பாராட்டை நடாலியா தட்டிச் சென்றார். குறிப்பாக காம்போதி ராகத்தில் சிவன் மீது அமைந்த ஒரு பாடலுக்கு அவர் ஆடியவிதம் மனதை கொள்ளை கொள்ளுவதாக இருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பரதநாட்டியத்தை உன்னிப்பாக கற்று நடாலியா ஆடிய விதத்தை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் மனம் திறந்து பாராட்டினர். இந்த நடன அரங்கேற்றத்தில் குரு கௌசல்யாவின் நட்டுவாங்கமும், கேசவலுவின் கிளாரினட், சுப்பைய்யா பிள்ளையின் ஹார்மோனியம் ஆகியவையும் போற்றத்தக்கவையாக இருந்தன.

Back    Next    Top