TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

இளங்கலைஞர்களின் இனிய தமிழ் கீர்த்தனங்கள்

சென்னை... செப்டம்பர்...5

தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் ஆதரவில் அவர்களால் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றன. இதில் ஷ்ரீவித்யா, கிருஷ்ணபிரியதர்சினியின் கச்சேரியை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

தங்களது அருமையான குரலில் தமிழ் கீர்த்தனங்களை இந்த சகோதரிகள் பாடியது, கேட்பவர்களுக்கு இனிய சுகத்தை அளிப்பதாக இருந்தது. கஜவதனா, கோடீஸ்வர ஐயர் இயற்றிய 46-வது மேளகர்த்தா ராகமான ஷட்வித மார்கினியில் இடம்பெற்ற அந்தரங்க என்ற தமிழ் கீர்த்தனை ஆகியவை இவர்களது புலமையை விளக்குவதாக இருந்தது.

இந்த சகோதரிகளின் குரல் வளத்தில் லதாங்கி ராக ஆலாபனை மிக மதுரமாக இருந்தது. குரலில் நல்ல ஏற்ற இறக்கங்களும், குழைவும் கேட்பவர் நெஞ்சங்களை உருகச் செய்தது.

இளங்கலைஞர்களின் இன்னிசை வரிசையில் டி.சபரிகிரிசனின் புல்லாங்குழல் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. சபாபதிக்கு வேறு தெய்வம் என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலின் நேர்த்தியான சங்கீதமும், ஸ்வரக்கோர்வையும் மிகச்சிறப்பாக கையாளப்பட்டு வழங்கப்பட்டன.

Top


கிருஷ்ணய்யர் நூற்றாண்டு நடன நிகழ்ச்சிகள்

சென்னை... ஆகஸ்ட்...29

பரதநாட்டியத்திற்கும், சங்கீதத்திற்கும் அரும்பணிகள் ஆற்றிய கிரு ஷ்ணய்யரின் நூற்றாண்டு விழா சமீபத்தில் சென்னை மியுசிக் அகா டமியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் 15-ந் தேதி வரை நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நடன நிகழ்ச்சிகளின் சிறப்பு, இதில் ஆடிய 14 பேர் 40 வயதை கடந்தவர்கள். சிலர் 50 வயதையும், ஒரு சிலர் 60 வயதையும் கடந்தவர்கள் என்பது தான். இந்த வயதிலும் அவர்கள் அனைவரும், பரதநாட்டியத்தின் மரபுகள் மாறாமல் ஆடியது பார்ப்பவர்களின் கண்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

தொடக்க நிகழ்ச்சியாக புகழ்பெற்ற நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் நிகழ்ச்சி இருந்தது. புரந்தரதாசரின் பாடலுக்கு அவர் வர்ணம் ஆடினார். இந்த நிகழ்ச்சியில் ஷ்ரீகாந்தின் நட்டுவாங்கமும், காயத்ரி மற்றும் விஜயாவின் பாட்டும் தரமாக இருந்தது.

Back    Next    Top