TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

இதயம் கவர்ந்த இளம் கலைஞர் மணிமாறன்

 

சென்னை... ஆகஸ்ட்...29

எந்த துறையிலும் இளைஞர்களின் சாதனை தனிச்சிறப்பு கொண்டது தான். அதிலும் குறிப்பாக இசை துறையில் இளைஞர்கள் புதிது புதிதாக அணி அணியாக வருவதும், சாதனைகளை நிகழ்த்துவதும் ஒரு சமூகத்திற்கே பெருமை சேர்க்கக்கூடியது அல்லவா? இவை தான் சமீபத்தில் சென்னையில் கச்சேரி நிகழ்த்திய இளைஞர் மணிமாறனின் குரல் வளம் மீண்டும் உணர்த்தியது.

கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியின் மிகச்சிறந்த மாணவர்களில் ஒருவரான மணிமாறன் அற்புதமான குரல் வளத்தையும், தெளிந்த நீரோடை போன்ற சாரீரத்தையும், அற்புதமான குரல் ஏற்ற இறக்கங்களையும் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்யாணி ராக ஆலாபனையும், மாயமாளவ கவுளை ராக ஆலாபனையும் சங்கீத ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தின என்றால் அது மிகையில்லை. இது தவிர ஷ்ரீதீட்சிதரின் பஜரே ரேசித்த என்ற கல்யாணி ராக கிருதி உயிர் துடிப்பு பொருந்தியதாக இருந்தது. ஸ்வரக்கோர்வைகளை பொருத்தமான ஏற்ற இறங்கங்களுடன் பாடிய விதம் மணிமாறனின் சிறப்பான எதிர்காலத்தை நமக்கு உணர்த்துவதாக இருந்தது. மற்றுமொரு சிறப்பு மணிமாறனின் குரலுக்கு பக்கவாத்தியங்களாக வந்தவர்களின் கைவண்ணம்தான்.

Top


ரசிகர்களை கண்ணீர் விடவைத்த டி.கே.பட்டம்மாள்

சென்னை... ஆகஸ்ட்...10

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீதத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து, கோடிக்கணக்கான இதயங்களை கனியவைத்துக்கொண்டிருக்கும் டி.கே.பட்டம்மாள், கேட்போரை பரவசத்தில் ஆழ்த்திய மற்றுமொரு கச்சேரியை சமீபத்தில் நிகழ்த்தினார். சென்னை லஸ் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள "ராகசுதா" என்ற அரங்கை, இம்மாதம் 3-ந் தேதி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தபின் டி.கே.பட்டம்மாள் சங்கீத ஆலாபனை செய்தார்.

சிறிது கால இடைவெளிக்கு பிறகு அப்போது தான் அவர் மேடையில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. காலதேவன் போடும் கோடுகள் டி.கே.பட்டமாளின் குரலிலும் தனது விளையாட்டை ஆடியிருந்ததை புரிந்து கொள்ளமுடிந்தது.

ஆம். வயோதிக்கத்தால் அந்த வற்றாத குரல் வளத்திலும் சிறிது ந டுக்கம் இருந்ததை காணமுடிந்தது. ஆனால் தனது வாழ்க்கையை யே, இசைக்கு அற்பணித்த ஒரு மேதையின் குரல் அது என்பதை, வயது முதிர்ச்சியின் காரணமாக சிறிது பிசிறு தட்டினாலும், ஓரளவு சங்கீத ஞானம் உள்ளவர்களாலும் புரிந்து கொள்ளமுடிந்தது. இந்த தள்ளாத வயதிலும் தனது தினசரி சாதகங்களை டி.கே.பட்டம்மாள் தவறவிடவில்லை என்பது இதிலிருந்து தெரியவருவதாக சங்கீத விற்பன்னர்கள் கூறும் செய்தியாகும்.

Back    Next    Top