![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
இசை |
|
|
வளமான
குரலும், பாட்டு திறன் சிறக்க பண்பட்ட குரல் வளம் தேவை. இந்த இரண்டும் இணைந்தால் தான் கச்சேரி கலை கட்டும். இந்த இரண்டும் ஒன்று சேர சிரத்தையும், கடின உழைப்பும் சாதகமும் தேவை.இவை அனைத்தையும் கொண்டு ரசிகர்களை மெய் மறக்க செய்த இரண்டு இசை நிகழ்ச்சிகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றன. இவற்றில் ஒன்று நெய்வேலி ஆர்.சந்தான கோபாலனின் நிகழ்ச்சியாகும். வடபழனியில் ஆதிலக்ஷ்மி கலை அகாடமி சார்பில் நிகழ்த்திய கச்சேரியாகும். கர்நாடக இசையின் மேன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் அவரின் இசை நிகழ்ச்சி அன்று அமைந்திருந்ததுடன் அதற்காக அவர் சிரமம் எடுத்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. தியாகராஜ சுவாமிகளின் மேருசம்மானத்தை பைரவி பரணத்தில் மிகச்சிறப்பாக பாடி பரவச மூட்டினார். அன்றைய நிரவலும், ஸ்வரமும் தியாகராஜ சுவாமிகளின் கிருதியில் உள்ள நயமான பதில்களை இசைமூலம் வெளிப்படுத்தும் அவரது ஆர்வத்தை புலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தியாகராஜரின் மற்றொரு பாடலான இராம பக்தியை சுத்தபங் களா ராகத்தில் பாடினார். பின்னர் அவர் எடுத்துக்கொண்ட எதுகல காம்போதி ராகத்தின் மூலம் தேனாக உருகும் இசை ரசிகர்களின் செவிப்புலனில் நிலைக்க செய்தார். மொத்தத்தில் அன்று அவர் தொட்ட ராக ஆலாபனைகள் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். பக்கவாத்தியமாக வயலின் வி.தங்கராஜன், பந்தவராளி, சங்கராபரணம் ஆகியவற்றை விரிவாக வாசித்தது வயலின். வயலின் கலையின் சிறந்த அம்சத்தை தொட்டுவிட்டது. இதற்கு இணையாக வேலூர் ராமபத்ரனின் மிருதங்கமும் அமைந்திருந்தது. கஞ்சரா வி.நாகராஜன் இவர்களுக்கு இணையாக அன்று சோபித்தார். சங்கராபரணம் ராகத்தில் இவர்களது தனி ஆவர்த்தனமும் தனியாக சொல்லும்படி அமைந்திருந்தது. ரசிகர்களை கவர்ந்த மற்றொரு இசை நிகழ்ச்சி ேஷாபா கணேசன் தியாகராயநகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் நடத்திய கச்சேரியாகும். அந்நிகழ்ச்சி கர்நாடக இசையில் அவருக்குள்ள திறமையை புலப்படுத்தியது. பந்தவராளி, தர்பார் ராகங்களில் பாடல்களை தொடங்கிய சுபா கணேசன், பட்டினம் சுப்பிரமணி ஐயர் மரிவரையை சண்முகப்ரியாவில் கொடுத்தது ரசித்து அநுபவிக்கும் படியாக இருந்தது. முத்து சுவாமி தீட்சகரின் ஷ்ரீவெங்கடகிரிசம் என்ற பாடலில் அவரின் குரல்வளம் சிறப்பாக புலப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பாவை பாடல் ஒன்றை சாவேரியில் இசைத்தார். தென்னிந்தியாவில் இசை முறையில் தனித்துவம் பெற்ற முக்கிய ராகமான மத்திய மாவதி உள்ள பல சிறந்த அம்சங்களை சுபா கணேசன் மிகுந்த ஆர்வத்துடன் ஆலாபனை செய்தார். அதே போல் தியாகராஜரின் வெங்கடேசனின்னுவையும் அவர் இசைத்த விதம் கச்சேரியை திட்டமிட்டு நடத்தும் அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. பக்கவாத்தியகாரர்களான மேலக்காவேரி தியாகராஜனின் வயலின் வி.எம்.கணேசனின் மிருதங்கம் ஆகியவையும் சுபா கணேசனின் இசையோடு இணைந்து இன்பம் அளித்தன. |
|