TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

வரதராஜர் கோயில்
காஞ்சிபுரம்

இந்துக்களின் 7 முக்கிய புனித தலங்களுள் ஒன்று காஞ்சிபுரம். இங்கு 126 கோயில்கள் உள்ளன காஞ்சிபுரம். 20 நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரமாகவும், 6வது, 8வது நூற்றாண்டுகளில் பல்லவர்களின் தலைநகரமாகவும் விளங்கியது. கடந்த 4 நூற்றாண்டுகளாக இங்கு நெய்யப்படும் பட்டு சேலைகளுக்கு பிரசித்தமானது. இன்றும் நெசவாளர்கள் தங்க இழைகளைக் கொண்டு மிக நேர்த்தியான பட்டு சேலைகளை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்படும் பட்டு சேலைகள் உலக பிரசித்தி பெற்றவை.

ஏகாம்பரேஸ்வரர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், வரதராஜர் கோயில், கைலாசநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் ஆகியவை காஞ்சிபுரத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களாகும்