TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை

தமிழ்நாட்டின் இராண்டாவது பெரிய நகரம் மதுரை, வைகை நதியின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மதுரை மாநகரம். 6வது நூற்றாண்டில் அரசாண்ட பாண்டிய மன்னன் குலசேகரன் இந்நகரத்தை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.

மதுரை மாநகரம் மீனாட்சி அம்மன் கோயில் வாயிலாக மிகச் சிறப்பானதும், முதல் நகரமும் என்ற சிறப்பு, இங்கு ஆண்ட மன்னர்களின் மிகச்சிறந்த ஆட்சி முறைகளை பறைச்சாற்றுவதாகவும் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்:-

குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரையின் பெருமைமிகு சிறப்பாகும். எனினும் 16வது மற்றும் 18வது நூற்றாண்டில் ஆட்சி புரிந்த நாயக்கன்மார்களுக்கே இக் கோயிலைக் கட்டிய பெருமை உரிதாகும். இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 12 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு உரிய மிகப் பெரிய சிறப்பாகும். எனினும் இவற்றின் வடக்கே அமைந்துள்ள கோபுரம் மட்டும் மிகவும் உயரமானதும், எளிதில் ஏறி கோபுரத்தை அடையக்கூடியதுமான நிலையில் உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரக் கோயிலின் கோபுரத்திற்கு அருகோ, சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்துக்கள் இக்கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திராவிட நாகரீகத்திற்கும், சிற்ப கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்கோயில். இந்நிலையில் இது போன்ற மிக சில கோயில்களே, இரட்டை கோபுர அமைப்புக் கொண்ட சிறப்புடையதாகும்.