Train Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics
Courier
Educational Institutions
Entertainment
Financial Services
Food
Furniture
Health
Hospitals
Internet & World Wide Web
Jewelry
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation
Video
Others
|
திருநெல்வேலி மாவட்டம்
2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்புப் பெற்ற மாவட்டம், வீர பாண்டிய கட்டபொம்மன் ஆண்ட மாவட்டம் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து உயிர்துறந்த வீர சிறப்பு மிக்க மாவட்டம்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டம் பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இரண்டு நகரங்களை கொண்டது. பத்தமடை பாய்களுக்கும், தென்னங்கீற்றினால் செய்யப்பட்ட கைவேலைகளுக்கும் புகழ்பெற்ற இடம்.
காந்திமதி நெல்லை அப்பர் கோயில்:-
பார்வதி பரமசிவனுக்கு கட்டப்பட்ட கோயில் தாமிரை வடிவிலும், விலை மதிக்க முடியாத அரிய நகைகளும், ஆயிரங்கால் இசை மண்டபங்களும் இக்கோயிலின் சிறப்பு.
கிருஷ்ணபுரம்:- விஷ்ணு கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிற்பங்கள், சிற்பக்கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த திருவேங்கட நாதன் கோயில் திருச்செந்தூர் செல்லும் வழியில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
கழுகுமலை:- ஜைய்னமதத்தினற்கு முக்கியமான இடம் இங்கு மலையை குடைந்து செதுக்கிய வெட்டுவான் கோயில், சிவனுக்கு உண்டு.
பத்தமடை:- இங்கு தயாரிக்கும் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை.
சங்கரன் கோயில்:- ஆறுமுக சங்கர நாராயணன் கோயில் உள்ளது. வருடத்திற்கு இருமுறை சூரிய ஒளி நாராயணனின் பாதங்களில் படுவது இக்கோயில் சிறப்பு.
தென்காசி:- இங்குள்ள உலகம்மை விஸ்வநாத ஆலயம் சுமார் 400 ஆண்டு கால சிறப்பு பெற்றது. இவ்வூரிலிருந்து தான் குற்றாலத்திற்குச் செல்லவேண்டும்.
பாபநாசம், மணிமுத்தாறு அணை:- பாபநாசம் அணையும், மணிமுத்தாறு அணையும் இயற்கை அளித்த வரங்கள் ஆகும். இங்கு உள்ள வெட்ப நிலையும், தோட்டங்களும், உல்லாசப் பயணம் செய்ய சிறந்த இடங்களாகும்.
குற்றாலம்:- "Spa of the South" என்று அழைக்கப்படும் குற்றாலம் ஒன்பது விதமான நீர்வீழ்ச்சியினை கொண்டது. 1.பெரருவி 2. சிற்றருவி 3. செண்பக அருவி 4. தேனருவி 5. ஐந்தருவி 6.புலி அருவி 7 பழைய குற்றால அருவி 8. புது அருவி 9 பழத்தோட்ட அருவி இந்த
அருவிகளில் குளிப்பதனால் பலநோய்கள் குணமடையும். தென்காசியிலிருந்து 6கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
Hotels:-
Township Guest Houses, Tourist Bunglow, Forest Department Rest House,
Chouldries and Dharmasalas, Dhalavol House.
|
|