TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

ஆன்மீகம்


Perumal திருவல்லிக்கேணி

அடர்ந்த சோலைகள் சூழ்ந்துள்ளபடியால் அவற்றைத் தாண்டி சூரியனின் கதிர்களும் நுழைய முடியவில்லை. சூரியனின் ஒளிகூடப் புகமுடியாத அளவுக்கு அவ்வளவு சோலைகள் எங்கே உள்ளன. சென்னை மாநகரத்தின் நடுநாயகமாக அமைந்த திருவல்லிக்கேணியில் தான் அவை உள்ளன. திருவல்லிக்கேணியில் அவ்வளவு பொழில்களா? ஆம், திருவல்லிக்கேணி தான். ஆனால், இப்பொழுதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேசத்தை மங்களாசாஸனம் செய்ய எழுந்தருளிய போது இத்தலம் அவ்வாறிருந்ததாம். அதைத் தான் அவர் தமது திருமொழியில்

குரவமே கமழும் குளிர் பொழிலூடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.
Perumal

என்று அருளிச்செய்துள்ளார். அடர்ந்த துளசிக் காடுகளுடன் கூடிய தலமாக விளங்கிய படியால் புராணங்களில் இத்தலம் பிருந்தாரண்யம் என்றே வழங்கப்பட்டுள்ளது. (பிருந்தம்=துளசி.அரண்யம்=காடு.) அல்லி மலர்கள் நிரம்பிய குளத்தை (கேணியை) உடைய ஊர் ஆகையால் திரு-அல்லி-கேணி என்று அழகு தமிழில்இவ்வூர் வழங்கப்பட்டது.

Next    Top