TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

தமிழக வரலாறு மற்றும் அரசியல்


தமிழக வரலாறு, எகிப்திய, சுமேரிய ஆரிய வரலாற்றுக்கு முற்பட்டதாகும். வேத கால நாகரீகம், திராவிட நாகரீகத்திலிருந்து தோன்றியதாகும். சிந்து சமவெளி நாகரீகம், திராவிட - தமிழக நாகரீகமாகும். திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒன்று. ஆகவே, தமிழ் பிறந்த காலம் கி.மு. 600 முற்பட்ட காலம்.

கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு வசந்த காலம் என்று சொல்லக் கூடும். அக்காலத்தில் சிறந்த தமிழ் மன்னர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தார்கள். கி.பி. 4ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட பல்லவர்கள் வடநாட்டவர்கள். கி.பி. 4 முதல் 9ம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டு வரலாறு ஒரு புதுப்பாதையில் ஒடலாயிற்று. பல்லவ ஆட்சியை ஒரு "புதுயுகம்" என்ற கூறலாம்.

கி.பி. 10 முதல் 13 வரை சோழர்கள் காலமென்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். உழவுத் தொழிலே மக்களின் தலையாய தொழியாக இருந்தபோதிலும், கைத் தொழில்களும் வழக்கத்தில் இருந்தன. சோழர் காலத்தில்தான் எங்கும் கோயில்கள் பெருமளவில் கட்டப்பட்டன. கி.பி.14 முதல் 17 வரை நாயக்கர்கள் ஆட்சி புரிந்தனர். அதனை விஜய நகர பேரரசு என்று வழங்கி வந்தனர். இக் காலத்தில்தான் தமிழ்நாடு முதன் முதலில் ஆந்திராவோடு கலந்தது. அப்போதுதான் இந்து மதமும், முகமதிய மதமும், கிருஸ்துவ மதமும் தமிழ் நாட்டில் பெருகத் தொடங்கியது. கி.பி. 10 நூற்றாண்டில் தமிழ் நாட்டின் கிழக்கு கரையில் முகமதியர்கள் குடியேறினார்கள்.

கி.பி. 1498ம் ஆண்டு `வாஸ்கோடகாமா' என்ற போர்ச்சுகீசிய மாலுமி இந்தியாவின் மேற்று கரையிலுள்ள கள்ளிக் கோட்டையில் வந்து சேர்ந்தார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். சென்னையில் Santhome என்ற இடம் போர்ச்சுக் கீசியர்களுக்கு சொந்தமாயிற்று கி.பி. 1772 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். இந்த ஆண்டில்தான் ஆங்கில ஆட்சி தொடங்கியது. Warran Hastings இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தமிழ் நாட்டின் வரலாறு அதிலிருந்து இந்திய வரலாறோடு கலந்தது. அப்போதுதான் முதல் முதலாக மாவட்டங்கள் தோன்றின. இம்மாவட்டங்களின் தலைவர்களாக கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் தமிழ் நாட்டின் பெரும் பகுதி ஆங்கிலேயருக்கு சொந்தமாகியது. 1760ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால், அவர்களால் தூக்கிலிடப்பட்டான். ஆங்கிலேயரை எதிர்த்து போர்க் கொடி தூக்கிய முதல் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

1800ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் பல அரசியல் அமைப்புகளை ஏற்படுத்தினர். அவைகளை இன்னமும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் கூடியது. இதற்கு தலை தாங்கிய பாலகங்காதர திலகர் 1800 திலிருந்து ஏறக்குறைய 145 ஆண்டுகள் விடுதலை உணர்ச்சி வலுப்பெற்று வந்தது. 1800-1858 வரை விடுதலை உணர்ச்சி உருக் கொண்டது. 1858 அதுவே ஒரு இயக்கமாக மாறியது. 1900 இந்த இயக்கம் உச்ச நிலை அடைந்தது. 1947இல் வெற்றி பெற்றது.

1919ம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 1921ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் பிறகு 1935ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டம், இந்திய அரசாங்கம் ஒருகூட்டாசி (Federation)ஆக இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. 1935 ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் மக்கள் காங்கிரஸின் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்று காட்டுவதற்காக காங்கிரஸ் அங்கத்தினர்கள் பொது தேர்தலில் கலந்து கொண்டு, பதினென்றில் ஒன்பதில்(11,9) வெற்றி கண்டார்கள். வெற்றி பெற்ற மாகாணங்களில் மந்திரி சபையை அமைத்தார்கள். 1947ம் ஆண்டு தமிழ் நாடு, ஆந்திரா, மலையாள, கன்னட நாடுகளுடன் தென் கன்னட மாநிலங்கள் இணைந்து, சென்னை இராஜதானியாக இருந்தது. அதன் பின்னர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் திராவிட இயக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். தமிழகம் என்ற பெயரை கொண்டு தமிழ்நாடு குமரி எல்லை வரை செயல்படும் என்று அறிஞர் அண்ணா அறிவித்தார். ஆந்திரமும், கர்நாடகமும் தனித்தனி மாநிலங்களாயின.

அறிஞர் அண்ணா, காமராஜர், ராஜாஜி, பக்தவச்சலம், கருணாநிதி ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக தமிழ்நாட்டை ஆண்டுவந்தனர். பின்னர் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த திரு. M.G.இராமசந்திரன், அவரது வாரிசாக அதே திரைப்படத்துறையில் அவருடன் நெடுங்காலமாக நடித்து புகழ் பெற்ற செல்வி ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி செய்தனர்.

சமீபத்தில் முடிவடைந்த பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானார்.

மாநகராட்சி தேர்தலில் சென்னை மேயராக முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயரானார்.