மொழி
தமிழ்நாட்டுக்கு உரிய மொழி தமிழ். தமிழ் என்பதாலேயே அது தமிழ்நாடு என்று பெயர் பெறலாயிற்று. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கியபோதே தோன்றிய மொழி தமிழ் என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. "கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் என்ற சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. மொழிகளுக்கெல்லாம் தலையான மொழியாகும், உலகப் பொதுமறையான திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் தோன்றிய காலத்தே தமிழ் மொழி சிறப்பு பெற்றது என்ற புகழ் உடையதாகும்.
அடிப்படை மொழி தமிழ் எனினும் பேச்சுத்தமிழில் சில மாற்றங்களால் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுதலும் உண்டு. குறிப்பாக, கோயமுத்தூரில் வாழும் தமிழர்கள் பேசக்கூடிய தமிழ் நடுவகையாகும். இப்படி, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பேசப்படும் தமிழ், குமரி மாவட்ட தமிழ், மதுரை மாவட்ட தமிழ் என்று மாவட்டந்தோறும் தமிழ் வேறுபட்டு இருப்பதையும் காணலாம்.
தமிழ் தவிர, தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, கொங்கு, உருது, குஜராத்தி, என்று கிட்டத்தட்ட 23 மொழி பேசக்கூடிய மக்களும் வாழுகின்ற நாடாகும் தமிழ்நாடு.
அவர் மொழியில் அவரவர் உரையாடவும், கல்வி பயிலவும், சடங்குகளை ஏற்றுக்கொள்ளவும், வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் ஏதுவான நாடாக திகழ்கிறது தமிழ்நாடு. கலப்பு திருமணம் செய்துகொள்வதற்கும், வியாபார நிமித்தம் காரணமாக தமிழ்நாட்டில் வந்து குடியேறியவர்களும், குடி உரிமை பெற்றவர்களும் வாழும் நாடாகும்.
|
|