TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

சிற்பங்கள்


மாமல்லபுரம்

சென்னையிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரம், வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. பல்லவர்கள் காலத்து சிற்பங்கள், கல்வெட்டுகள், குகை கோயில்கள், மாதிரி கோவில்கள் ஆகியவை காலங்காலமாக தமிழர் பண்பாட்டினையும், கலைத்திறனையும் பறை சாட்டுவதாகும். இவை தவிர, கிருஷ்ணமண்டபம், 5 ரதம், கடல் கோயில், புலிகுகை ஆகியவும் காணத் தகுந்தவை. இங்கு வாழும் மக்கள் பொங்கல் பண்டிகையை ஜனவரி மாதத்தில் இங்குவரும் உல்லாச பயணிகளுடன் கூடி "Pongal Tourist Festivals and Dance Festival" என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.


கன்யாகுமரி

கன்யாகுமரி அமைந்துள்ள இருப்பிடமே இதனுடைய மிக சிறப்பான சுற்றுலா தளமாகும். இது இந்தியாவின் தென்முனையாகும். அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகிய மூன்று கடல்கள் சங்கமமாகின்றன. இங்குள்ள கடற்கரை பகுதியுடன் கூடிய மணண்பரப்பு, பல நிறமுடைய மண்வெளிகள் இதன் மற்றொரு சிறப்பு. பனை ஓலையில் செய்யப்படும் பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை கன்யாகுமரியில் நினைவு கூறத்தக்க அனுபவங்களாகும். ஏப்ரல் மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி அன்று, சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைந்து ஒன்றை ஒன்று சந்திப்பது வழக்கம்.

குமரி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம், விவேகானந்தர் நினைவு மண்டபம், ஆகியவை சுற்றுலா பயணிகள் காண வேண்டிய இடங்கள்.



Back    Top