TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

பெருகி வரும் கதிர்வீச்சால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து

சென்னை... ஜனவரி...31

விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் சராசரி வாழ்க்கையில் சுமைகளைக் குறைத்து சுகங்களைக் கொண்டு வந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு பயக்கும் பல விஷயங்களையும் அது கொண்டு வரத்தான் செய்கிறது. குறிப்பாக கதிர்வீச்சால் மனித ஆரோக்கியத்திற்கு நாள்தோறும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இந்தியாவின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான அவிநாஷ் சி.அகர்வால் தன்னுடைய சமீபத்திய புத்தகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். வல்லரசு நாடுகள் அணுக்கழிவுகளை உலகின் பல்வேறு கடல்களில் தொடர்ந்து கொட்டிவருவது சுற்றுப்புற சூழலை ஏற்கனவே பெருமளவில் மாசுபடுத்திவிட்டது. ஆனால் புதியதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஷயம், செல்லுலர் தொலைபேசிகள் மற்றும், காட்லஸ் தொலைபேசிகளால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்து தான். இத்தகைய தொலைபேசிகளுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் போது வெளிப்படும் ஒருவித கதிர்வீச்சு மூளையிலும், கழுத்துப் பகுதியிலும் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது.

கதிர் வீச்சளவு

கதிர்வீச்சின் அளவு ரெம் என்று கணக்கிடப்படுகிறது. சுமார் 1 லட்சம் மில்லிரெம் கதிர்வீச்சளவு ஏற்பட்டால் அது நோய் ஏற்படுத்தக்கூடும். 5 லட்சம் மில்லிரெம் அளவுக்கு இது சென்றால் அது ஆளைக் கொன்றுவிடும். முன்பு பாதுகாப்பானது என்று கருதப்பட்ட கதிர்வீச்சின் அளவு தற்போது ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. இதனை சமாளிக்க ஆப்பிள் பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றை பெருமளவில் உண்ணுவது கதிரியக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியை நமக்களிக்கும் இந்த மருத்துவர் கூறுகிறார். ஆனால் உலகளவில் இந்த கதிரியக்க பிரச்சனையை சமாளிப்பதற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி முடிவுகளை மேற்கொண்டால் ஒழிய இந்த ஆபத்தை சமாளிக்க முடியாதென்றும் அவர் எச்சரிக்கிறார்.

Top