![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
ஆரோக்கியமான இருதயத்திற்கு எளிய வாழ்க்கை முறைகள்நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம்முடைய முன்னோர் வாக்கு. எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் நோய்கள் இருந்தால், அந்த செல்வங்களால் பலனில்லை என்பது நோய்வந்த பின்பு தான் மனிதர்களுக்கு புரிகிறது. இந்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும், குறிப்பாக இருதயம் சம்மந்தமான வியாதிகளை போக்குவதற்கும் வராமல் தடுப்பதற்கும் எளிமையான வாழ்க்கை முறைகள் மிகுந்த உதவி புரிய முடியும் என்கிறார் புதுதில்லியில் உள்ள மருத்துவரான டாக்டர் சஜ்ஜர். "புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் சஜ்ஜர். தற்பொழுது "சாவோல் மருத்துவ ஆராய்ச்சி மையம்" என்ற அமைப்பை தொடங்கி நிர்வகித்து வருகிறார். ராஜஸ்தானி மொழியில் சாவோல் என்றால், செய்யும் காரியங்களை திறம்படவும் முழுமையாகவும் செய்வது என்று பொருள்படும். இருதய கோளாறுகளை தடுப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் கொழுப்பு சத்து குறைவாக உள்ள உணவு பொருட்கள், யோகாசனம் செய்வது, தியானத்தில் ஈடுபடுவது போன்றவை மிகப்பெரும் அளவில் உதவி புரியும் என்று டாக்டர் சஜ்ஜர் கூறுகிறார். இந்தியாவில் செய்யப்படும் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைகளில் 90-லிருந்து 95 சதவிகிதம் தேவையற்றவை என்றும், தவிர்க்கப்படக்கூடியவை என்றும் டாக்டர் சஜ்ஜர் தெரிவிக்கிறார். இந்தியாவில் ஆண்டு தோறும் 16,000 பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைகளும், 7,000 ஆங்கியோ பிளாஸ்டீஸ் என்ற அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதாகவும், இதற்கு 400 கோடி ரூபாய் செலவு பிடிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்தியாவின் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதாகவும், 2001-ம் ஆண்டில் நாட்டின் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சமாக இருக்கும் என்றும் அவர் சொல்லுகிறார். இதில் கவலை தரும் அம்சம் சிறிய வயதிலேயே மாரடைப்புகள் இந்தியர்களுக்கு ஏற்படத்துவங்கியிருப்பது தான் என்றும் டாக்டர் சஜ்ஜர் மேலும் தெரிவிக்கிறார். இதற்கான காரணங்களையும் தாம் நடத்திய ஆய்வில் டாக்டர் சஜ்ஜர் கண்டுபிடித்திருக்கிறார். புதுதில்லியில் குடிப்பழக்கம், மாமிச உணவு, மும்பையிலுள்ளவர்களுக்கு மன அழுத்தம், சென்னையில் இருதய நோய்களுக்கு தேய்காய் எண்ணெய்யில் செய்யப்பட்ட உணவை உண்பது, கல்கத்தாவில் புகைப்பிடிக்கும் பழக்கமும், முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். சாவோல் இருதய நலத்திட்டம் வெற்றிகரமாக இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இருதய நோய் முற்றிய நிலையில் இந்த திட்டத்தில் சிகிச்சை பெற வருபவர்களை 15 நாட்களில் தன்னுடைய சிகிச்சையினால் டாக்டர் சஜ்ஜர் அவர்கள் தேறுவதற்கான வழிமுறைகளை காட்டுகிறார். ஆண்டுதோறும் 1000 பேருக்கு சாவோல் திட்டத்தின் கீழ் அவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதில் 2 சதவிகிதமே தோல்வியில் முடிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். |
|