![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
தனிமையின் நெருங்கிய நண்பன் ஜலதோஷம்."இனிது இனிது தனிமை இனிது", என்றார் மகாகவி பாரதி. ஆனால் மகாகவியின் இந்த கவிதை வரிகளை, கவி வாக்காக எண்ணி கடைபிடிப்பவர்களுக்கு, சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயத்தை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று தற்பொழுது கண்டுபிடித்துள்ளது. தனிமையி இருப்பவர்களுக்கு ஜலதோஷம், அதாவது இருமலும், தும்மலும், சளியும் எளிதில் பற்றக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. சமூகத்தொடர்பும் - ஜலதோஷமும் "பன்முகத் தன்மை கொண்ட உறவுகள் உள்ளவர்களுக்கு, ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது" அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள கார்னகி மெலோன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சமீபத்தில், 18 வயது முதல் 55 வயது வரையிலான 276 பேரிடம் ஒரு சோதனை நடத்தினர். இந்த 276 பேருக்கும் ஜலதோஷத்தை உருவாக்கும் வைரஸ்கள் உடலில் ஏற்றப்பட்டன. இதன் முடிவு என்ன தெரியுமா? பரந்த அளவில் சமூகத்தொடர்புகள் உள்ளவர்களுக்கு, அதாவது, குடும்பம் நண்பர்கள், சமூக அமைப்புகள், சங்கங்கள் என்று பல தொடர்புகளை உடையவர்களுக்கு ஜலதோஷம் எளிதில் பிடிக்கவில்லை. ஆனால், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் சிலருக்கும், விதவைகளுக்கும் விரைவில் ஜலதோஷம் பற்றிக்கொண்டதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வினை மேற்கொண்ட டாக்டர். ெஷல்டன் கோஹன், பன்முகத் தன்மை கொண்ட உறவுகள் உள்ளவர்களுக்கு, ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது என்று, இந்த ஆய்விலிருந்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாக கூறுகிறார்.
வாழ்க்கை கண்ணோட்டம் "பிரிட்டனில் 25 வயது முதல் 39 வயது வரை உள்ளஆண்களின் ஆயுள், இந்த நூற்றாண்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு தற்பொழுது குறைந்துள்ளது. இதற்கு காரணம், அதிகரித்து வரும் விவாகரத்துகள், குடும்பங்கள் சிதைதல், தனிமை ஆகியவை தான் என்று டாக்டர் ெஷல்டன் தெரிவிக்கின்றார்." வாழ்க்கையில் ஓரிரண்டு வகை சமூக உறவுகளை வைத்திருப்பவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்பு, ஆறு வகை மற்றும் அதற்கும் மேலான சமூக உறவுகளை வைத்திருப்பவர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் அதிகமானதாகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. பிரிட்டனில் 25 வயது முதல் 39 வயது வரை உள்ளஆண்களின் ஆயுள், இந்த நூற்றாண்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு தற்பொழுது குறைந்துள்ளது. இதற்கு காரணம், அதிகரித்து வரும் விவாகரத்துகள், குடும்பங்கள் சிதைதல், தனிமை ஆகியவை தான் என்று டாக்டர் ெஷல்டன் தெரிவிக்கின்றார். பரந்த அளவில், பன்முகத்தன்மை கொண்ட சமூக உறவுகளை வைத்திருப்பவர்கள், பொறுப்புணர்ச்சியின் காரணமாக தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து கொள்ளுவதாகவும், அவர்களுக்கு உள்ள மனநிம்மதி, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதாகவும் டாக்டர். ெஷல்டன் உறுதியாக கூறுகிறார். தன்னுடைய தொழிலைத் தவிர, தனக்கென்று குடும்பமோ, நண்பர்களோ இல்லாதவர்கள், அந்த தொழிலில் பெரிய இடர்பாடுகள் ஏற்பட்டால் இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் உங்கள் தொழில், உங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மட்டுமே இருக்குமேயானால், அதில் நசிவு ஏற்பட்டாலும், உங்கள் வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து போகாது என்கிறார் டாக்டர் ெஷல்டன். அடிப்படையில் ஜலதோஷமானாலும், வேறு எதுவானாலும், விஷயம் ஒன்று தான் - வாழ்க்கையை நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் காணுகிறீர்கள் என்பதும், தோல்விகள் ஏற்படும் பொழுது அவை உங்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தை எந்த அளவுக்கு பாதிப்பதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பதும் தான், என்கிறார் டாக்டர் ெஷல்டன். |
|