![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
தெற்காசியாவில் பெருகிவரும் எய்ட்ஸ்இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எய்ட்ஸ் நோய் கவலை தரும் விதத்தில் அபாயகரமான அளவில் பரவி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. தெற் காசியா உயிர்க் கொல்லி நோயான இந்த எய்ட்ஸ் என்னும் டைம் பாம்மின் மீது அமர்ந்து கொண்டிருப்பதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை செய்கிறது. கூலித் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர், எல்லைகளைத் தாண்டி பிழைப்புக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லுவோர் இந்த எய்ட்ஸ் நோயை பரப்புபவர்களாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மியான்மாரில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரும், பங்களாதேஷில் 20 ஆயிரம் பேரும், நேப்பாளத்தில் 15 பேரும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் திருமணமாகும் வயது தள்ளிப்போவதும், எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு ஒரு காரணியாக அமைந்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. போதைப் பொருள் பழக்கம் இந்திய நேப்பாள எல்லையிலும், இந்திய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எல்லைகளில் தொய்வின்றி தொடர்ந்து பெருகி வருவது நிலைமையை மிகவும் அபாயகரமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பணியாற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தடுக்கும் வழிகள்
பிரென்ச் உதவி
Top |
|