வைட்டமின்களை அதிகமாக
சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
என்பார்கள். ஆனால் சமீபத்தில் இங்கிலாந்தில்
நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வில் வைட்டமின் மாத்திரைகளை
அதிகமாக உட்கொள்வதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படலாம்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் உணவு ஆலோசனை
கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட
இங்கிலாந்தின் உணவு அமைச்சர் ஜெஃப் ரூக்கர்,
கடைகளில் 10 மில்லி கிராம்களுக்கு மேல் இனிமேல்
வைட்டமின் மாத்திரைகள் கொடுக்கப்படக்கூடாது என்று
உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 10 மில்லி
கிராம்களுக்கு மேல் வைட்டமின் திறன் கொண்ட
மாத்திரைகளை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்த சட்டம்
ஒன்று இயற்றப்படும் என்றும் அவர்
தெரிவித்திருக்கிறார்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.
வைட்டமின்களுக்கும் இது பொருந்தும். வரம்பின்றி
வைட்டமின் சத்து அடங்கிய உணவு பொருட்களையும்,
மாத்திரைகளையும் உண்பது, உணர்ச்சியற்ற தன்மை, உடல்
கூச்சம், சோம்பல் ஆகியவற்றை உருவாக்கும் என்று
விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.