புதுதில்லி... ஜனவரி...22
உண்மையான மாற்றங்கள் இந்தியாவில்
ஏற்படாவிட்டால் சோவி யத் ரஷ்யா சிதறியது போன்று
இந்தியாவும் சிதறிப் போகும் என்று முன்னாள் மத்திய
நிதியமைச்சர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த
பேட்டியில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்த மன்மோகன்
சிங் சர்வதேச அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நன்கு
உணர்ந்துள்ள போதிலும், நம்முடைய அரசியல்வாதிகள்,
இந்தியா தன்னுடைய பொருளாதார துறைகளை இரும்பு கதவுகளைக்
கொ ண்டு பூட்டிக்கொள்வதன் மூலம் முன்னேறமுடியும் என்று
தப்புக் கணக்கு போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
நாட்டின் தற்போதைய நிலைமை எனக்கு மிகவும்
கவலையளிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் ரஷ்யாவும்,
சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சிதறுண்டதைப் போன்று
இந்தியாவும் சிதறிப்போகும் வாய்ப்பு உருவாகும் என்றும்
மன்மோகன் சிங் கூறினார். நாடு எதிர் கொண்டிருக்கும்
சில கசப்பான உண்மைகளை வெளிப்படையாக பேசக்கூடிய தகுதி
வாய்ந்த தலைமை நமக்கு இப்போது அவசியம் என்றும்,
டாக்டர் மன்மோகன் சிங் கூறினார். எந்த நாட்டிலும்
தண்ணீரும், மின்சாரமும் மக்களுக்கு இலவசமாக
வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை
இவற்றை இலவசமாக வழங்குவதும், தொடர்ந்து நாங்கள்
இதனைக் கடைப்பிடிப்போம் என்றும் நம்முடைய
அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளிப்பதும்,
அழிவுப்பாதையில் நாம் மேற்கொள்ளும் பயணமாகும் என்று
மன்மோகன் சிங் கூறினார்.