இந்தியாவில்
அழகற்ற அமைதி
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய
பிராந்தியத்தில் வரும் பத்தாண்டு களில் ஓர்
நிரந்தரமற்ற, அழகற்ற அமைதி நிலவும் என்று சமீபத் தைய
அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்தியாவுக்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே ஏற்படும்
மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடிய நிலைமை உள்ளதாக
கணிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில்,
இப்படிப்பட்ட ஆய்வு பலருக்கும் ஆச்சர்யத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ரான்ட்
கார்ப்பரேஷன் ஆய்வு
அமெரிக்காவின் ராணுவ
புலனாய்வுத் துறைக்காக ரான்ட் கார்ப் பரேஷன் நடத்திய
இந்த சமீபத்திய ஆய்வு, இந்தியாவும், பாக்கிஸ் தானும்
தங்களது இலக்குகளை சண்டையின் மூலம் அடைய முடியாத
இயலாமையில் இருப்பதை உணர்ந்துள்ளதாக
தெரிவிக்கின்றது. எனினும் சண்டை தான் வராதே ஒழிய, இரு
நாடுகளும் மற்றொரு நாட்டினுள் உள் நாட்டு வன்முறையை
தூண்டிவிடும் போக்கு தொடரும் என்று இந்த ஆய்வறிக்கை
எச்சரிக்கை செய்கிறது. 1991-ம் ஆண்டு இந்தியாவில்
மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்கள்
முழுமை பெற வேண்டுமானால், சண்டையில் ஈடுபடுவது அந்த
இலக்கை எட்ட உதவாது. இதன் காரணமாகவும் இந்தியா
சண்டையில் ஈடுபட தயங்கும் என்று இந்த அறிக்கை
தெரிவிக்கின்றது.
அரசியல் நிலைமை
எனினும் அணு ஆயுதங்களை
உபயோகிப்பது என்பது குறுகிய ராணுவ தயார் நிலையை
பொறுத்த விஷயம் அல்ல என்றும், அது ஒரு அரசியல் ரீதியான
முடிவாகவே இருக்கமுடியும் என்றும் இந்த ஆய்வு
தெரிவிக்கின்றது. பாக்கிஸ்தான் தனக்கு அடிமையாவதோ,
பாக்கிஸ்தான் துண்டாடப்படுவதோ பாரதத்தின்
விருப்பத்தில் இல்லை என்று இந்த அறிக்கை
தெரிவிக்கின்றது. தற்பொழுதைய வளர்ச்சி விகிதத்தை
பாரதம் கடைப்பிடித்தால் உலக அளவில் அது வலுமிக்க
பொருளாதார சக்தியாக உருவெடுப்பதை எவரும் தடுக்கமுடியாது
என்றும் அறிக்கை கூறுகிறது. பாரதத்தில்
மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதார
சீர்த்திருத்தங்கள் வெற்றி பெறுவது, தெற்காசிய
பிராந்திய அரசியல் நிலைமையையே பெரும் மாற்றத்திற்கு
உள்ளாக்கும் என்று அறிக்கை கூறுகின்றது. இந்த
பின்னணியில் அமெரிக்கா தனது நல்லுறவுகளை
பாரதத்துடனும், பாக்கிஸ்தானுடனும் வளர்த்துக்கொள்வது,
அடுத்த நூற்றாண்டின் மிகப் பெரிய சக்தியான சீனாவை
கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் என்று இந்த அறிக்கை
குறிப்பிடுகின்றது.
எனவே எப்படி பார்த்தாலும் வரும்
ஆண்டுகளில் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும்
குறைவு. எனினும் உள்நாட்டு பயங்கரவாதம்
தலைவிரித்தாடுவது தவிர்க்கமுடியாதது. இதைத்தான்
தெற்க்காசியாவில் அழகற்றதோர் அமைதி நிலவும் என்று
ரான்ட் கமிஷன் இந்த ஆய்வு எச்சரிக்கின்றது.
Top |