இம்மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின்
ஓய்வுப்பெற்ற ராணு வ உயர்அதிகாரிகளும், வல்லுநர்களும்,
தற்போது இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் ராணுவ
தாக்குதல்கள் முழுஅளவில் வெற்றி பெற முடியாது என்று
கூறினர். வவுனியாவையும் - யாழ்ப்பானத்தை யும் இணைக்கும்
நெடுஞ்சாலையை கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவம்
சமீபத்தில் துவக்கியிருக்கும் "ஜெயசிக்ரு", தனது
இலக்கை அடைவது சந்தேகத்திற்கு இடமான ஒன்று
பெரும்பாலான பேச்சாளர்கள் கூறினர். மேலும் அப்படியே ஒரு
வேளை, இந்த நெடுஞ்சாலையைக் கைப்பற்றினாலும் அதனை,
தக்கவைத்துக்கொள்வது இலங்கை ராணுவத்திற்கு செலவு
பிடிக்கும் சிக்கலான ஒரு காரியமாகும் என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் மற்றொரு ஆச்சரியமான விஷயம்,
இதில் உரை நிகழ்த்திய பெரும்பாலான தமிழர்
பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள தமிழர்களில் 85
சதவிகித தமிழர்கள் எல்.டி.டி.யினரை ஆதரிப்பதாக கூறியது
தான்.
ராணுவ வல்லுநர்களின் மற்றொரு கருத்து, எல்.டி.டி.யினர்
தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இழந்திருந்தாலும்,
முற்றிலுமாக அவர்களை நிர்மூலமாக்குவது இலங்கை
ராணுவத்தின் வல்லமைக்கு மிகவும் அப்பாற்பட்டது என்பது
தான்.
மற்றுமொரு முக்கிய விஷயம் புதியதாக போரிடுவதற்கு 10
வயது சிறுவர்களைக்கூட எல்.டி.டி.யினர்
நிர்பந்திக்கின்றனர். இளம் பெண்களையும் போர்
முனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். இதனால் சண்டை
போட விடுதலை புலிகளுக்கு ஆட்களுக்கு பஞ்சமில்லை. ஆனால்
அதே சமயத்தில் இலங்கை ராணுவத்தில் பெரும் நெருக்கடி
தோன்றியுள்ளதாக பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
போரிட மறுத்து ஓடி விடும் வீரர்களை மடக்கி
பிடிப்பதற்கே இலங்கை ராணுவத்திற்கு அதிக நேரம்
பிடிக்கும் என்று சில வல்லுநர்கள் தெரிவித்தனர்.