![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
உல்ஃபா தீவிரவாதிகளுக்கு டாட்டா நிறுவனம் நிதி உதவிசென்னை... அக்டோபர்...10 அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான உல்ஃபாவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி அளித்து வந்தது, தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வடகிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் உல்ஃபாவிற்கு செய்யப்பட்டு வந்துள்ள இந்த நிதி உதவி பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. உல்ஃபா தவிர போடோ தீவிரவாதிகளுக்கும் டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், அவருடன் இருந்த மற்ற 2 பெண்களையும் மும்பை போலீசார் கைது செய்த போது தான் உல்ஃபாவிற்கு டாட்டா டீ நிறுவனம் நிதி உதவி அளித்து வந்தது தெரியவந்தது. உல்ஃபா தீவிரவாதிகளுக்கு இந்தியா முழுவதிலும் பல்வேறு நகரங்களில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காகவே அஸ்ஸாம் மாநிலத்தில் மருத்துவ உதவி திட்டம் ஒன்றை டாட்டா டீ நிறுவனம் துவக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் அஸ்ஸாமில் உள்ள டீ நிறுவனங்கள் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 90-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்த நிறுவனங்களிடமிருந்து கட்டாயமாக நிதி வசூல் செய்ய உல்ஃபா தீவிரவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் டீ நிறுவனங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் டாட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கடத்தப்பட்டும், வேறு சிலர் கொலை செய்யப்படவுமான சூழ்நிலை உருவானதால் டாட்டா டீ நிறுவனம் உட்பட அநேகமாக அனைத்து டீ நிறுவனங்களும் உல்ஃபாவிற்கு கப்பம் கட்டத்துவங்கிவிட்டன. உல்ஃபா மற்றும் போடோ தீவிரவாதிகளால் கடுமையான பிரச் சனைகளுக்கு உள்ளாகியிருக்கும் மகந்தா அரசு இந்த விஷயத்தில் உ றுதியான நடவடிக்கையை மேற்கொள்ள துவங்கிவிட்டது. டாட்டா டீ நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் தேச துரோக குற்றம் சா ட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் காவல்து றை டாட்டா டீ உட்பட அனைத்து டீ நிறுவனங்களின் மீதும் ஆக்ரோ ஷமான போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பழி வாங்குகிறார் மகந்தா
சி.பி.ஐ.விசாரணை
|
|