![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
செல்லுலர் தொலைபேசிகளும் உடல் ஆரோக்கியமும் விஞ்ஞானம் வளர வளர மனிதனின் சுமைகள் குறையும் என்று கூறுவார்கள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் மற்றுமொரு விளைவாக மனிதன் தனக்கு தானே சீர்கேட்டை தேடிக் கொள்ளுகிறான் என்பதும் நாமறிந்தது தான். இதற்கு சமீபத்திய உதாரணம் செல்லுலர் தொலைபேசிகள். இருந்த இடத்திலிருந்தே உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள வகை செய்வது தொலைபேசி. அலெக்சாண்டர் கிராஹாம்பெல் கண்டுபிடித்த இந்த அற்புத சாதனம் மனித வாழ்வையே பெரும் மாற்றத்திற்கு உட்படுத்தியதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக எங்கு சென்றாலும் நம்முடையபாக்கெட்டில் நாம் வைத்து எடுத்து செல்ல வசதியாக சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட செல்லுலர் தொலைபேசிகள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டில் இந்த ஆய்வுப்பணிகள் மிகுந்த மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் வரும் ஆண்டுகளின் ஆய்வுப்பணிகளுக்காக 50 லட்சம் டாலர்களுக்கு ம் மேல் ஒதுக்கியுள்ளது. நரம்பு மண்டல பாதிப்பு செல்லுலர் தொலைபேசிகள் இயங்குவதற்கு பெரிதும் உதவிபுரியும் ரேடியோ அலைகள் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக இது பற் றி ஆராயும் விஞ்ஞானிகள் சமீபத்தில் கூறத்துவங்கியுள்ளன. மின்காந் த அதிர்வலைகளால் காதுகளும், மூளையும் பாதிப்படைவதாக க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லுலர் தொலைபேசியின் ஆண்டனாவிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு காதுகளின் கேட்கும் தன்மையை பாதிப்படைய செய்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் விஞ்ஞானிகள் சுண்டெலி ஒன்றை இந்த சோதனையில் சமீபத்தில் ஈடுபடுத்தினர். ஒரு மணிநேரம் காதில் செல்லுலர் தொலைபேசியை நாம் வைத்து பேசினால் எவ்வளவு மின்காந்த அதிர்வலைகள் வெளிவருமோ அவை, அந்த சுண்டெலியின் மீது செலுத்தப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து பல ந ரட்கள் செய்ததில் புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அந்த சுண்டெலிக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம். மேலும் பேஸ்மேக்கர் எனப்படும் இருதயத்தைசீராக இயங்க வைப்பதற்கான கருவியை இருதயத்தில் பொருத்திக் கொண்டிருக்கும் நோயாளிகள் செல்லுலர் தொலைபேசியை உபயோகிப்பதால் அவர்களுக்கு புதிய சங்கடங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. செல்லுலர் தொலைபேசிகளால் நாட்டின் வர்த்தகம் பெருகினாலும், அந்நிய செலாவணி பெருமளவில் வந்து குவிந்தாலும், இதை உபயோகிப்பவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மையென்று விஞ்ஞானிகள் இப்பொழுது கருதத்துவங்கியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இதுபற்றிய ஆராய்ச்சி இன்னமும் துவங்கவில்லை. அதற்குள் செல்லுலர் தொலைபேசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருமளவில் பெருக்கிக் கொள்ள சங்கல்பமிட்டு செயல்பட்டு வருவதாக சில சமூகவியல் அ றிஞர்கள் கூறுகின்றனர். |
|