![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
ராஜஸ்தானில் ராட்சத சூரிய அடுப்பு சென்னை... ஜுலை...31 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபுவில் ராட்சத வடிவில ரன சூரிய அடுப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 1200 பேருக்கு உணவு சமைப்பதற்கான திறன் கொண்டது இந்த அ டுப்பு. கோலோ பில்ஸ் என்பவர் மூளையில் உதித்த இத்திட்டம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பொறியியலாளர் ஒருவரது உதவியால் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப கூட்டுறவுக்கான ஜெர்மன் வளர்ச்சி அமைப்பு இந்த ராட்சத சூரிய அடுப்பை நிர்மாணித்துள்ளது. இதற்காக ஜெர்மனி 25 லட்ச ரூபாயை அளித்துள்ளது. முழுக்க முழுக்க ஜெர்மன் உதவியுடன் இந்த சூரிய அடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பு அம்சமாகும். மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் கல்வி சங்கத்தில் சூரிய அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 180 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உள்ள இடத்தில், வட்டவடிவிலான 24 உலைகள் சாய்மான நிலையில் பொருத்தப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 600 கிலோ கிராம் நீராவியை உற்பத்தி செய்யும் இவை, 75 கிலோ வாட் மின்திறன் கொண்டதாகும். சூரிய வெப்பத்தை உள்வாங்கும் டிஷ் ஆண்டனாக்கள், அவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள 12 ரிசீவர்களுக்கு அனுப்புகின்றன. அங்கு 200 டிகிரி செல்சியஸ் வரை 16 பார் அழுத்தத்தில் சூடேற்றப்படும் நீரை வெப்பமாற்றியின் மூலம் நீராவியாக மாற்றுகின்றன. அதன் பிறகு இந்த நீராவி பைப் வழியாக பிரதான சமையல் பகுதிக்கு செல்லுகிறது. அங்கு உணவு சமைப்பதற்கு அது உபயம் அளிக்கிறது. இனிமேல் சிறிய அளவில் தனி வீடுகளுக்கும் சூரிய அடுப்புகள், இந்த மாதிரி வடிவிலிருந்து உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் பற்றாக்குறை, வருடம் தோறும் உயர்ந்துவரும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்யின் விலை ஆகியவை சராசரி இந்தியனுக்கு தீராக்கவலையாக இருந்து வருகின்றன. அந்த கவலையை போக்கும் விதத்தில் இந்த சூரிய அடுப்புகள் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. |