கடலுக்கடியில்
புற்று நோய்க்கு மருந்து
சென்னை... ஆகஸ்ட்....2
தீர்க்கப்படாத பல நோய்களுக்கு மருந்துகள்
கடலுக்கடியில் உள்ள பல்வேறு உயிரினங்களில்
புதைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
கருதத்துவங்கியுள்ளனர். கடல்வாழ் உயிரினங்களின்
உடலில் உள்ள பல பொருட்களைக் கொண்டு புதிய மருந்துகளை
உருவாக்க முடியும் என்று பலமான கருத்து உருவாகயுள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள கடற்கரையில் அமெரிக்க
மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூட்டாக மேற்கொண்ட
முயற்சியில் குறிப்பிட்ட ஒரு கடல்வாழ் உயிரினம்,
புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்று
கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பரவுவதை இந்த
உயிரினத்தை கொண்டு உருவாக்கப்படும் மருந்து முற்றிலும்
குணப்படுத்தாவிட்டாலும் இதன் பக்கவிளைவுகளை குறைக்க
உதவலாம் என்று கருதப்படுகிறது.
மருந்து
கம்பெனிகளின் ஆராய்ச்சி
இந்த புதிய கண்டுபிடிப் பையடுத்து,
அமெரிக்கா மற்றும் பிற ஐரே ரப்பிய நாடுகளில் உள்ள, பல
பெரிய மருந்து கம்பெனிகள் கடல் ஆராய்ச்சிக்கு மிகுந்த
முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளன.
இதற்காகஏராளமான பணத்தையும் அவை செலவிடத்துவங்கியுள்
ளன. ஆனால் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த
பிரையோஸ்டேட்டின் - 1 என்ற இந்த மருந்திற்கு தேவையான
கடல்வாழ் உயிரினம் கலிஃபோர்னிய கடற்கரையில்
மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இதற்கான தேவை மிக
அதிகமாக உள்ளது. இது மிகப்பெரிய அளவில் மாபெரும்
கடல்களில் ஆராய்ச்சிகளை மேற்க்கொள்ள
கம்பெனிகளை நிர்பந்திக்கின்றது. விளைவு, கடல்வாழ்
உயிரினங்களுக்கு இந்த ஆராய்ச்சியினால்
காலப்போக்கில் பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற
அச்சத்தையும் விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தியிருப்பது
தான்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுப்புற சூழலுக்கு
பாதிப்பு ஏற்படும் என்பதும், இயற்கை செல்வங்கள்
தங்கள் செழுமையை இழந்து விடும் என்பதும் இத்தகைய
ஆராய்ச்சிகளினால் மீண்டும் நிருபிக்கப்படுகிறது.
Top |