TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இந்திய ராணுவத்திற்கு அதிநவீன போர் விமானம்

சென்னை... ஆகஸ்ட்...10

இந்திய விமான படைக்கு அதிநவீன போர் விமானம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். கண்ணுக்கு புலப்படாத, ராடாரின் பார்வையில் மண்ணைத்தூவும், "ஸ்டெல்த் பாமர்" எனப்படும் இந்த அதிநவீன போர் விமானம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது

பாரத பாதுகாப்பு அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகரான ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இந்த விமானத்தை

வடிவமைத்துள்ளார். இத்தகவலை, உலகின் பல்வேறு நாடுகளின் ராணுவ செய்திகளை, பாதுகாப்பு பற்றிய தகவல்களை வெளியிடும் புகழ்பெற்ற சஞ்சி கையான, "ஜேன்ஸ் இன்டர்நேஷனல் டிஃபன்ஸ் ரெவ்யூ" க்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்துல்கலாம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே "லைட் காம்பேட் ஏர்கிராஃப்ட்" எனப்படும் இலகுரக போர்விமானத்தை இந்தியா 1983-ல் உருவாக்க திட்டமிட்டு, 95-ம் ஆண்டில் அது வெள்ளோட்டம் இடப்பட்டது. இந்த புதிய "ஸ்டெல்த் பாமர்" போர்விமானம் முந்தைய இலகுரக போர்விமானத்தின் நவீன படுத்தப்பட்ட வடிவமாக கருதப்படுகிறது. இதனை நடுத்தரரக போர்விமானம் என்று பாதுகாப்பு விஞ்ஞானிகள் பாகுபாடு செய்துள்ளனர்.

ரஷ்யாவின் உதவி

இந்த போர்விமானத்தை தயாரிப்பதற்கு 10000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று கருதப்படுகிறது. கி.பி.2000-வது ஆண்டில் இந்த போர் விமானம், இந்திய விமான படையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பிரான்சு நாட்டின் மிராஜ் மற்றும் பிரிட்டனின் ஜாகுவார் போர்விமானங்களுக்கு மாற்றாக பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஸ்டெல்த் பாமர்" போர் விமானத்திற்கு தேவைப்படும் உபரி பாகங்கள் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படயிருக்கின்றன. எனினும் விமானத்தை குறிப்பிட்ட திசை நோக்கி இயக்குவதற்கு பயன்படும்

"வெக்டர் டெக்னாலஜி" யை ரஷ்ய நாட்டிடமிருந்து பெறுவதற்கு பாரத விஞ்ஞானிகள் முயற்சி செய்துவருகின்றனர்.

ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை இந்திய விமானப்படைக்கு அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"ஸ்டெல்த் பாமர்" போர்விமானம் பாரத விமானப்படையில் சேர்க்கப்பட்டால், பாரதத்தின் ராணுவ பலம் பலமடங்கு பெரு குவதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் விண்ணில் முதல்நிலை ஆதிக்கம் செலுத்தும் திறனும் பாரதத்திற்கு கிடைத்துவிடும் என்று, சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

Top