![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
|
|||||
![]()
|
இந்த கண்காட்சியில்
மாமன்னன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தது,
பிரமாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டர்
தன்னுடன் கிரேக்க சிற்பக்கலைஞர்களையும் உடனழைத்து
வந்துள்ளார். அவர்களது வருகை இந்திய கலைகளையும்,
கலாச்சாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. இதனை கி.பி.
முதல் நூற்றாண்டில் உருவான காந்தாரக்கலை வடிவங்களில்
நம்மால் தெளிவாக கண்டுகொள்ள முடிகிறது. கிரேக்க படையெடுப்பு இந்திய கலைகளுக்கு மெருகேற்றியதையும், மேன்மை சேர்த்ததையும், நம்மால் மிகவும் துல்லியமாக இந்த கண்காட்சியிலிருந்து உணர்ந்து கொள்ளமுடிகிறது. |
|
இந்த கண்காட்சிக்கு சென்று திரும்புவோர், மனித குல வரலாற்றில் என்றென்றும் தனக்கென்று ஒரு தனியிடத்தை பெற்றிருக்கும், கிரேக்க நாகரீகத்தைப்பற்றிய பல தகவல்களை எளிமையான முறையில் அறிந்து கொண்டு திரும்பினர் என்று சொன் னால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. இந்தியர்கள் தங்கள் சுதந்திரத்தின பொன்விழாவை கொண்டாடு ம் வேளையில், இதுபோன்றதொரு கண்காட்சி நாட்டின் தலைநக ரில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். அடுத்த மாதம் 15-ந் தேதி வரை இந்த கண்காட்சி புதுதில்லியில் ந டைபெறுகிறது. இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியகமும், கிரேக்க அரசின் கலாச்சார அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. |
|